தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது - நிதின் கட்கரி


தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது -  நிதின் கட்கரி
x
தினத்தந்தி 24 Dec 2018 10:54 AM GMT (Updated: 24 Dec 2018 11:38 AM GMT)

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மேகதாது அணை விவகாரம், ரபேல் போர் விமான ஒப்பந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

தமிழக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன் தமிழக அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

தமிழக எம்.பிக்களின் போராட்டத்திற்கு எதிராக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் வரும் டிச.27ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக எம்.பிக்களுக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி எழுதி உள்ள கடிதத்தில்,

மேகதாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவதை திரும்ப பெற வேண்டும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் உடன்பாடு எட்டப்படாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது. நாடாளுமன்றத்தை முடக்குவதை கைவிட்டு, விவாதம் நடத்த முன்வருமாறு தமிழக எம்.பிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story