ஏழைகளுக்கான சமையல் எரிவாயு திட்டத்தில் ரூ.1,850 மானியம் வாங்கிய ஒடிசா மந்திரி


ஏழைகளுக்கான சமையல் எரிவாயு திட்டத்தில் ரூ.1,850 மானியம் வாங்கிய ஒடிசா மந்திரி
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 26 Dec 2018 8:54 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் நவீன்பட்நாய்க் மந்திரி சபையில் உணவு துறை மந்திரியாக இருப்பவர் எஸ்.என்.பட்ரோ.

புவனேஸ்வர்,

எஸ்.என்.பட்ரோவுக்கும், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது

இந்த நிலையில் ஒடிசாவில் நடந்த பாரதீய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘ஏழைகளுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட சமையல் எரிவாயு மானிய திட்டத்தின் கீழ் மந்திரி பட்ரோ இந்த ஆண்டில் சமையல் எரிவாயு மானியமாக ரூ.1,850–ஐ பெற்று உள்ளார் என பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மந்திரி பட்ரோ, ‘இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்னை பழிவாங்கும் அணுகுமுறையில் இதனை தெரிவித்து உள்ளார்’ என்றார். எனது வீட்டுக்கு வந்த ஊழியர் சமையல் எரிவாயு சிலிண்டர் கொண்டு வந்து கொடுக்கிறார். அந்த சிலிண்டருக்கான மானியம் எனது கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது எனக்கு தெரியாது. நான் ஏன் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாங்க வேண்டும்?’ என்றார்.


Next Story