முத்தலாக் மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை; மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி


முத்தலாக் மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை; மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி
x
தினத்தந்தி 27 Dec 2018 1:19 PM GMT (Updated: 27 Dec 2018 1:19 PM GMT)

முத்தலாக் மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை என மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட 5 விடுமுறை நாட்களுக்கு பின்னர் இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் மசோதாவிற்கு விளக்கம் அளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்பொழுது, 20 இஸ்லாமிய நாடுகள் முத்தலாக்கை தடை செய்து உள்ளன.  இந்தியாவை போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் அது ஏன் முடியாது? அரசியலின் முனையிலிருந்து இதை பார்க்க கூடாது என்று நான் கோருகிறேன்.

இந்த மசோதா  எந்தவொரு சமூகத்திற்கோ, மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ எதிரானது அல்ல.  இந்த மசோதா பெண்களின் உரிமைகள் மற்றும் நீதி பற்றியது என கூறினார்.

இந்த நிலையில், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே பேசும்பொழுது, கொலை போன்ற செயல்களுக்கு எதிராக சட்டம் உள்ளது.  ஆனால் தொடர்ந்து மக்கள் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.  அதனால் தண்டனைக்கான பிரிவு சட்டத்தில் உள்ளது என கூறினார்.

இந்த முத்தலாக் மசோதா யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்படவில்லை.  ஆனால் முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பிற்காகவே இது ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  இதற்கு எதிராக முஸ்லிம் நபர் சட்ட வாரியம் மற்றும் உலெமாக்களும் கூட உள்ளனர் என அவர் கூறினார்.

முத்தலாக் ஒரு சமூக பாவம் என் குறிப்பிட்ட அவர், இதனை ஒழிப்பதற்கான நேரம் வந்துள்ளது.  முத்தலாக் மசோதா எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை.  ஆனால் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணத்தில் பயம் உருவாக வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story