‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்பு காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு


‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்பு காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 1:36 PM GMT (Updated: 27 Dec 2018 1:36 PM GMT)

‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.

புதுடெல்லி,  

முத்தலாக் மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.  ‘முத்தலாக்’ தடையை மீறி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க ‘முத்தலாக்’ மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. 

மசோதா தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அரசு மறுத்தது. நீண்ட விவாதத்திற்கு பின்னர் மசோதா தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து  வெளிநடப்பு செய்தனர். 

Next Story