கற்பழிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜ.க. போராட்டம்


கற்பழிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜ.க. போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2018 10:30 PM GMT (Updated: 27 Dec 2018 9:17 PM GMT)

கற்பழிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பிப்லி கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து அந்தமாநில வேளாண்மைத் துறை மந்திரி பிரதீப் மஹாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து மந்திரி பிரதீப் பதவி விலகக்கோரி நேற்று காங்கிரஸ் மகளிர் அணியினர் துடைப்பத்துடன் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். தக்காளி, முட்டை ஆகியவற்றையும் மந்திரி வீட்டின் மீது வீசினர். இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதா மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் மந்திரி பிரதீப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்–மந்திரிக்கு இறுதி கெடு விதித்தனர். மந்திரியை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story