தேசிய செய்திகள்

‘‘ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டம் தயார்’’ மத்திய அரசு அறிவிப்பு + "||" + "Air India is planning a revival plan" Central Government Announcement

‘‘ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டம் தயார்’’ மத்திய அரசு அறிவிப்பு

‘‘ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டம் தயார்’’ மத்திய அரசு அறிவிப்பு
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.55 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது.

புதுடெல்லி,

ஏர் இந்தியாவுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை உருவாக்கி இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஜெயந்த் சின்கா கூறுகையில், ‘‘இந்த புத்துயிரூட்டும் திட்டம், ஏர் இந்தியாவை லாபகரமான குழுமமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டது. இதில், நிதி தொகுப்பும் அடங்கும். பயன்படுத்தப்படாமலும், மிகுதியாகவும் உள்ள சொத்துகளை விற்பதும் இதில் உண்டு.

மேலும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில், விமான வழித்தடங்களை சிறப்பாக பயன்படுத்தாததும், அவற்றை வேறு நிறுவனங்களுக்கு அளித்ததுமே ஏர் இந்தியாவின் மோசமான நிலைக்கு காரணம்’’ என்றார்.