”த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மன்மோகன் சிங்


”த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மன்மோகன் சிங்
x
தினத்தந்தி 28 Dec 2018 9:27 AM GMT (Updated: 28 Dec 2018 9:27 AM GMT)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமது அரசியல் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

புதுடெல்லி,

இந்திய விடுதலைக்காக, 1885ஆம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உமேஷ் சந்தர் பானர்ஜி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.

அப்போது மன்மோகன் சிங்கிடம் சமீபத்தில் வெளியான  ”த ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” திரைப்படம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். முதலில் செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங், அந்த திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பியதும் அவர் உடனடியாக பதில் அளிக்காமல் விறு விறுவென அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டாக கேக் வெட்டி கொண்டாடினர்.

Next Story