பாராளுமன்ற தேர்தலில் சூட்டை கிளப்பப்போகும் “தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்” பாஜக ஹேப்பி;காங்கிரஸ் கோபம்


பாராளுமன்ற தேர்தலில் சூட்டை கிளப்பப்போகும் “தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்” பாஜக ஹேப்பி;காங்கிரஸ் கோபம்
x
தினத்தந்தி 28 Dec 2018 10:27 AM GMT (Updated: 28 Dec 2018 10:46 AM GMT)

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாக உள்ளது.

புதுடெல்லி

மன்மோகன் சிங், கடந்த 2004-ம் ஆண்டு பிரதமரான சூழ்நிலை குறித்தும் அவரது ஆட்சிக் காலம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் வெளியான சமயத்தில் புத்தகத்தில் வந்தவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே என அப்போதைய பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என அந்தப் புத்தகத்தில் சஞ்சயா பாரு பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.

அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியிருக்கிறார். பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாக சூசன் பெர்னெட்டும், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூரும், பிரியங்கா காந்தியாக அஹானாவும் நடித்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌‌ஷய் கண்ணா நடித்திருக்கிறார். இவர் பா.ஜனதா முன்னாள் எம்.பி வினோத் கண்ணாவின் மகன் ஆவார்.

மகாராஷ்டிரா இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜீத் தம்பே பாட்டீல் தயாரிப்பாளரான அனுபம் கெருக்கு ஒரு கடிதம்  எழுதியுள்ளார்.

2004 மற்றும் 2008-க்கு இடையே மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய பாருவின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ள இந்த படத்தை  ஜனவரி 11-ஆம் தேதி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு சிறப்பு கண்ணோட்டத்தை திரையிட  கேட்டுக்கொண்டார்.

அதன்படி 2 நிமிடம் 43 விநாடிகள் ஓடும் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகத்தில் இடம்பெற்றவை என்ற குறிப்போடு தொடங்குகிறது.

2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பின்னர், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டது, ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரம் என அவரின் 10 ஆண்டுக்கால ஆட்சியின் பல்வேறு விவகாரங்கள் குறித்த காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. 

ஒரு காட்சியில் அப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் தான் ராஜினாமா செய்யப்போவாதக கூறுவதாகவும் அதற்கு சோனியாகாந்தி  ஒரு ஊழலை தொடர்ந்து மற்றொரு ஊழல் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ராகுல் (காந்தி) எவ்வாறு இதை ஏற்று  நடத்துவது என கூறுவது போல் காட்சியும் இடம்பெற்று உள்ளது.

இந்த மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்த படம், தற்போது 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. டிரெய்லர், ஆளும் பா.ஜ.க.வின் தரவரிசையில் சிறந்த மதிப்பீட்டை பெற்று உள்ளது.

இதுகுறித்து சத்யஜீத் தம்பே பாட்டீல் கூறும்போது டிரெய்லரில், "முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் குறித்த உண்மைகள் இதில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து இதில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என கூறி உள்ளார்.

தவறான காட்சிகள் அல்லது காங்கிரஸை தவறாக காட்டும் சில காட்சிகள்  உள்ளன. நாங்கள் அதனை படத்திலிருந்து திருத்தப்படவும், நீக்கப்படவும் வேண்டும் என்று கோரியுள்ளோம். அப்படி இல்லாவிட்டால், திரைப்படத்தை தடுத்து நிறுத்துவோம் என எச்சரித்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவும் இந்த திரைபடத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.


காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் சந்தீப் சிங் சுர்ஜ்வாலா

மோடியின் அரசை கேள்வி கேட்காமல் இருக்க பா.ஜ.க. இதனை போலி பிரச்சாரமாக பயன்படுத்துகிறது என கூறி உள்ளார்.

கிராமப்புற துன்பம், பரவலாக வேலைவாய்ப்பின்மை, பேரழிவு, தவறான ஜிஎஸ்டி, தோல்வியுற்ற மோடினோமிக்ஸ், அனைத்து ஊழலும் என கூறி உள்ளார்.

இந்த படத்தில் மன்மோகன் சிங்காக நடித்தவரும் தயாரிப்பாளருமான நடிகர் அனுபம் கெர் கூறியதாவது:-

அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், பொதுமக்கள் இந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு தருவார்கள். இந்த புத்தகம் 2014 முதல் இருந்து வருகிறது, அப்போது எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவில்லை, திரைப்படம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜாலியன் வாலா பாக் அல்லது ஹோலோகாஸ்ட் ஆகியவை குறித்து திரைப்படத்தில் உண்மைகளை மறைக்க முடியாது என கூறி உள்ளார்.

Next Story