மும்பை: ரூ.1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில் 4 பேர் கைது


மும்பை: ரூ.1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2018 6:30 PM GMT (Updated: 28 Dec 2018 6:10 PM GMT)

மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை வில்லேபார்லே கிழக்கு சாஸ்திரி நகர், சுபாஷ்நகர் மற்றும் சர்வீஸ்ரோடு, ஏர்போர்ட் மார்பிள் மார்க்கெட் போன்ற இடங்களில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஏர்போர்ட் மார்பிள் மார்க்கெட் பகுதியில் காரில் வந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சலீம் இஸ்மாயில் தோலா (வயது 52), சந்திரமணி திவாரி(41), சந்தீப் இந்திரஜித் திவாரி(38), கன்ஷியாம் சரோஜ்(43) என்பதும், போதைப்பொருளை பதுக்கிவைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ எடையுள்ள ‘பேன்டலின்’ என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





Next Story