காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவை ஒப்புதல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு


காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவை ஒப்புதல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 10:46 PM GMT (Updated: 28 Dec 2018 10:46 PM GMT)

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இணைந்து ஆட்சியமைத்து இருந்தது. இந்த கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகியதால் கடந்த ஜூன் மாதம் முதல்–மந்திரி மெகபூபா முப்தி பதவி விலகினார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் மாநில சட்டசபையை அதிரடியாக கலைத்த கவர்னர், அங்கு ஜனாதிபதி ஆட்சியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதன்படி கடந்த 19–ந்தேதி காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். பின்னர் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அதில் குரல் ஓட்டு மூலம் தீர்மானம் நிறைவேறியது. இதை அவையில் தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த விவகாரத்தில் உறுப்பினர்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என அறிவித்தார்.

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர், காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது சட்ட விரோதம் என கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்த கவர்னர் சத்யபால் மாலிக் கூறிய காரணங்களை வெளியிடுமாறு உள்துறை மந்திரியையும் அவர் கேட்டுக்கொண்டார். இதைப்போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.


Next Story