தேர்தல் முடிவு வெளியாகி 18 நாட்களாகிறது தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை


தேர்தல் முடிவு வெளியாகி 18 நாட்களாகிறது தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை
x
தினத்தந்தி 28 Dec 2018 10:58 PM GMT (Updated: 28 Dec 2018 10:58 PM GMT)

119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு கடந்த 7–ந்தேதி தேர்தல் நடந்து 11–ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

ஐதராபாத்,

ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று 2–வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 19 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி 2–வது இடத்தை பிடித்தது.

முதல்–மந்திரியாக சந்திரசேகரராவ் கடந்த 13–ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் ஒரே ஒரு எம்.எல்.ஏ.யான முகமது மெகமூத் பதவி ஏற்றார். அவர் வீட்டுவசதி துறை மந்திரியாகி உள்ளார். இவர்களை தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான கவுனிகா கூறுகையில், ‘இந்திய வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 18 நாட்களாகியும் இன்னும் பதவி ஏற்காமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் மந்திரிசபையும் அமைக்கப்படவில்லை. இது நாட்டின் கவனத்தை ஈர்த்து உள்ளது’ என்றார்.

இது தொடர்பாக தெலுங்கான ராஷ்டிர சமிதி கட்சி வட்டாரத்தில் விசாரித்ததில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story