நிரவ் மோடி பிரிட்டனில் உள்ளார்: மத்திய அரசு விளக்கம்


நிரவ் மோடி பிரிட்டனில் உள்ளார்: மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:56 AM GMT (Updated: 29 Dec 2018 6:04 AM GMT)

வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து,  இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.  

இந்த நிலையில்,  நிரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அரசிற்கு தகவல் தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மான்செஸ்டரின் தேசிய மத்திய பணியகம் இத்தகவலை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக ராஜ்ய சபாவில் பேசிய வெளிவிவகாரங்களுக்கான இணையமைச்சர் விகே சிங் தெரிவித்தார். 

நிரவ் மோடியை நாடு கடத்துமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சார்பில் இங்கிலாந்து அதிகாரிகளிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை தற்போது அங்குள்ள அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளதுஎனத் தெரிவித்தார்


Next Story