தேசிய செய்திகள்

மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து + "||" + Fire At Building Under Construction Near Kamala Mills In Mumbai

மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
மும்பையின் கமலா மில்ஸ் வளாகம் அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை, 

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தின் அருகே  இருக்கும் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணி நடந்து கொண்டு இருந்த அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 4 தீ அணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, கமலா மில்ஸ் வளாகத்தில் இருந்த உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 14 பேர் பலியாகி இருந்தனர். மும்பையில், நடப்பு வாரத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை செம்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். அதேபோல், வியாழக்கிழமை காலை டாங்கிர் ஜெயில் சாலையில் உள்ள பேண்டி பஜார் பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக சுமன்ராவ் தேர்வு
மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு செய்யப்பட்டார்.
2. பண்ருட்டி, நாட்டு மருந்துக்கடையில் தீ விபத்து; ரூ.6 லட்சம் சேதம்
பண்ருட்டி நாட்டு மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் சேதமடைந்துள்ளது.
3. மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் தீ விபத்து; தீயை அணைக்க 3 மணிநேரம் தொடரும் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி வருகின்றனர்.
5. ஓட்டேரியில் செருப்பு கம்பெனியில் தீ விபத்து
ஓட்டேரியில் மின்கசிவு காரணமாக செருப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.