தேசிய செய்திகள்

திருமணத்திற்கு தடையாக இருக்கும் என கூடுதல் விரல்களை தாயே வெட்டியதில் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம் + "||" + MP: Newborn dies after mother chops off extra fingers, toes

திருமணத்திற்கு தடையாக இருக்கும் என கூடுதல் விரல்களை தாயே வெட்டியதில் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம்

திருமணத்திற்கு தடையாக இருக்கும் என கூடுதல் விரல்களை தாயே வெட்டியதில் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம்
திருமணத்திற்கு தடையாக இருக்கும் என கூடுதல் விரல்களை தாயே வெட்டியதில் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
கந்த்வா,

மத்திய பிரதேசத்தின் கந்த்வா நகரில் சுந்தரதேவ் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் தாராபாய்.  இவருக்கு கடந்த 22ந்தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதற்கு இரு கைகளிலும் 6 விரல்கள் இருந்துள்ளன.  இதேபோன்று இரு கால்களிலும் 6 விரல்கள் இருந்துள்ளன.  இதனால் வருங்காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கு இவை தடையாக இருக்கும் என அந்த பெண் நினைத்து பயந்துள்ளார்.

இதுபற்றிய மூடநம்பிக்கைகளால் குழந்தைக்கு இருந்த கூடுதலான விரல்களை அவர் வெட்டியுள்ளார்.  அதன்பின் காயத்தில் பசுஞ்சாணம் கொண்டு பூசியுள்ளார்.  சில மணிநேரங்களில் குழந்தை இறந்து விட்டது.  இதனை கிராமத்திலேயே புதைத்து உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி ஊடகத்திற்கு தெரிய வந்த நிலையில் குழந்தையின் உடல் விசாரணைக்காக மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.  பிரேத பரிசோதனைக்கு பின்னரான மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.