மக்கள் சைவ உணவுக்கு மாறுகிறார்களா? - ஆன்லைனில் அதிகமாக ‘ஆர்டர்’ செய்ததாக தகவல்


மக்கள் சைவ உணவுக்கு மாறுகிறார்களா? - ஆன்லைனில் அதிகமாக ‘ஆர்டர்’ செய்ததாக தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:30 AM IST (Updated: 1 Jan 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் மக்கள் அதிகமாக சைவ உணவினை ஆர்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ஆன்லைன் மூலம் மக்களிடம் ‘ஆர்டர்’ பெற்று, ஓட்டல்களில் இருந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் தனது உணவு டெலிவரி புள்ளிவிவரங்களை 3-வது ஆண்டாக வெளியிட்டது.

அதில், கடந்த ஆண்டு(2018) நாடு முழுவதும் சைவ உணவுகளையே மக்கள் அதிகமாக ‘ஆர்டர்’ செய்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 43 சதவீத சைவ உணவுகளே ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், 2017-ம் ஆண்டு இது 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மிக அதிகமாக சைவ உணவுகளை ஆர்டர் செய்த நகரம், குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகும்.

அதற்கு மாறாக, பெங்களூரு, ஐதராபாத் மக்கள் அதிகஅளவில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்வதில் பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன. தர்பூசணி, சாத்துக்குடி, அன்னாசி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகள், ஆரோக்கியமான உணவுவகைகளாக நாடு முழுவதும் அதிகஅளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

சிக்கன் பிரியாணி, வறுத்த சிக்கன், மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, தென்னிந்திய சாப்பாடு, மினி சாப்பாடு ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்படும் உணவுவகைகளாக உள்ளன. 2017-ம் ஆண்டு, ஒரே நபர் செய்த அதிகபட்ச ஆர்டர் ரூ.38 ஆயிரமாகவும், குறைந்தபட்ச ஆர்டர் ரூ.10 ஆகவும் இருந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


Next Story