முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
முஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது அரசியல்சாசனத்துக்கு விரோதமனது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவந்தது.
இந்த அவசர சட்டம் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் தான் சட்டமாக மாறும். இதற்காக முத்தலாக் சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. இதில் முத்தலாக் மூலம் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்வது செல்லாது என்றும், இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டமசோதா கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க. போன்ற நடுநிலையான கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் அங்கு பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் தான் சட்டமாக கொண்டுவர முடியும்.
மாநிலங்களவையில் நேற்று காலை அ.தி.மு.க. எம்.பி.க்கள் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷம் போட்டனர். சில தி.மு.க. எம்.பி.க்களும் இதே பிரச்சினைக்காக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த அமளிக்கு இடையே சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, ‘மக்கள் நல தொழிலாளர்கள் சட்டம்-2018’ மசோதாவை தாக்கல் செய்தார். அ.தி.மு.க. எம்.பி.க்களின் அமளியால் அவையை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.
பின்னர் அவை மீண்டும் கூடியதும் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது உறுப்பினர்கள் தங்களது விவாதத்தை முன்வைக்கலாம் என்று அவை துணைத் தலைவர் அறிவித்தார்.
ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் எழுந்து நின்று எதிர்த்து கோஷங்கள் போட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) குலாம்நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் ஆகியோர், முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மசோதாக்களை தேர்வுக்குழு ஆய்வுக்காக அனுப்பும் வழக்கத்தை மாற்ற அரசு முயற்சிக்கிறது என்றும் குலாம்நபி ஆசாத் கூறினார். அவை துணைத் தலைவர், இந்த மசோதா நிறைவேறுவதற்கான வழியை காணும்படியும், உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமரும்படியும் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2-வது முறையாக அவையை அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார். அடுத்து நாளை (புதன்கிழமை) அவை கூடுகிறது.
முன்னதாக அவையில் சினிமா இயக்குனர் மிருணாள் சென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மிருணாள் சென் இந்த அவையில் ஆகஸ்டு 1997 முதல் ஆகஸ்டு 2003 வரை உறுப்பினராக இருந்தார்.
அவைத் தலைவர் வெங்கையா நாயுடு குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், இதனால் அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவைக்கு தெரிவித்தார்.

Related Tags :
Next Story