காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி தாக்குதல்


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி தாக்குதல்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:24 AM IST (Updated: 1 Jan 2019 10:24 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஸ்ரீநகர்,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த விதிகள் அமலில் உள்ள நிலையில் மறைமுக தாக்குதலில் அந்நாட்டு ராணுவம் சில சமயங்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்காம் பிரிவில் பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினர் நேற்று தாக்குதல் நடத்தும் நோக்குடன் ஊருடுவ முயன்றனர்.

அவர்கள் அடர்ந்த காட்டு பகுதி வழியே உயர்ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களுடன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வர முயன்றனர்.  அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வழக்கம்போல் வருபவர்கள் போன்று ஆடையணிந்து இருந்தனர்.  அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் அந்நாட்டின் அடையாளங்கள் இருந்தன.

சிலர் எல்லை பாதுகாப்பு படையினர் போன்றும் மற்றும் உளவு அமைப்பினர் போன்றும் உடை அணிந்திருந்தனர்.  இந்நிலையில், அவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர்.

இதனால் இந்திய எல்லையில் தாக்குதலுக்காக ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது.

இந்த நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் காரி கர்மரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிகளை மீறி இந்திய தரப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  தொடர்ந்து பிற விவரங்கள் வெளியாகவில்லை.

Next Story