குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு


குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 3:01 PM IST (Updated: 1 Jan 2019 3:01 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

கால்நடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி டிராக்டர் இலியா கிராமத்தில் சாலையோர குடிசைகள் மீது காலை 5.30 மணியளவில் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக சென்ற போது டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குடிசைகள் மீது மோதியது என்று தெரிவிக்கப்படுகிறது.


Next Story