காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்


காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்
x
தினத்தந்தி 1 Jan 2019 3:08 PM IST (Updated: 1 Jan 2019 3:29 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் காதர்கான் .

ஆப்கானிஸ்தானில் பிறந்தவர் காதர்கான்.  காதர்கான் 1973-ல் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) படத்தில் அறிமுகமானார். இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு  திரைக்கதை வசனம் எழுதி உள்ளார்.  81 வயதான இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 16 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காதர்கான் கனடா நேரப்படி டிசம்பர் 31-ஆம் தேதி உயிரிழந்ததாக அவரது மகன், சர்பராஸ்கான் தெரிவித்தார்.

காதர்கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தனது அசாத்திய நடிப்புத்திறமை மற்றும் தனித்துவமான நகைச்சுவை உணர்வு மூலம் திரையை பிரகாசமாக்கினார். அவர் ஆக்கப்பூர்வமான கதாசிரியராகவும் விளங்கினார். மறக்க முடியாத பல படங்களில் அவரது பங்களிப்பு இருந்தது. அவரது இறப்பு செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ பிரபல நடிகர் காதர்கான் ஜி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். காதர்கானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story