நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்:  பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Jan 2019 5:58 PM IST (Updated: 1 Jan 2019 5:58 PM IST)
t-max-icont-min-icon

நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ நிறுவன செய்தி ஆசிரியர் ஸ்மிதா பிரகாசுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

* துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை, துல்லிய தாக்குதல் நடத்துவதை  2  முறை தள்ளி வைத்து இருந்தோம். ராணுவ  வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்லிய தாக்குதலில் எந்த ராணுவ வீரரும் பலியாகக்கூடாது என உறுதியாக  இருந்தேன். 
(கடந்த 2016-ம் ஆண்டு  எல்லையை கடந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் அருகில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

* ராமர் கோவில் விவகாரத்தில்  நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது.  சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பிறகே ராமர் கோவில்  கட்டுவது குறித்து அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

* 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும்.

* ரிசரவ் வங்கி ஆளுனர்  உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை. உர்ஜித் படேல் சிறப்பாக பணியாற்றினார்.

* உர்ஜித்  பட்டேல் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா  செய்ய போவதாக கேட்டு கொண்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக கடந்த 6-7 மாதங்களுக்கு என்னிடம் சொன்னார். அதையும் அவர் எழுதி கொடுத்தார்.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர் .  நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என கூறினார்.

Next Story