பிரதமர் மோடியின் பேட்டியில் உண்மைத்தன்மை இல்லை: காங்கிரஸ் பாய்ச்சல்
பிரதமர் மோடியின் பேட்டியில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
2019-ஆம் ஆண்டின் முதல் தினமான இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டியளித்தார். இந்தப்பேட்டியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம், சபரிமலை விவகாரம், பண மதிப்பு நீக்க விவகாரம் உள்பட பல விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேட்டியை விமர்சித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடியின் பேட்டியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்று கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பண மதிப்பு நீக்க விவகாரம், ஜி.எஸ்.டி விவகாரம், வங்கி மோசடி, தேசிய பாதுகாப்பு விவகாரம், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி பிரதமர் பேசியிருக்க வேண்டும்.
அவரது பேட்டி பேச்சு வன்மை மிக்கதாகவும், கள நிலவரம் பற்றிய எந்த தகவலும் இல்லாததுமாக உள்ளது. அவரது பேட்டியில் ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு’, ‘எனது செயல்பாடு’ இவை மட்டும் தான் உள்ளன. தன்னைச் சுற்றி மட்டுமே அவர் அரசியல் செய்கிறார்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story