விமான எரிபொருள் விலை 14.7 சதவீதம் குறைப்பு - பெட்ரோல், டீசல் விலையை விட மலிவு


விமான எரிபொருள் விலை 14.7 சதவீதம் குறைப்பு - பெட்ரோல், டீசல் விலையை விட மலிவு
x
தினத்தந்தி 2 Jan 2019 12:30 AM IST (Updated: 2 Jan 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

விமான எரிபொருள் விலை 14.7 சதவீதம் குறைக்கப்பட்டது. இது பெட்ரோல், டீசல் விலையை விட குறைவானது ஆகும்.

புதுடெல்லி,

விமான எரிபொருள் விலை, மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, நேற்று அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.9 ஆயிரத்து 990 வீதம் குறைக்கப்பட்டது. அதாவது, 14.7 சதவீதம் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது மாதமாக விலை குறைந்ததால், ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.58.06 ஆக சரிந்துள்ளது. இது, பெட்ரோல், டீசல் விலையை விட குறைவானது ஆகும்.

Next Story