திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம் களையிழந்தது - பகலில் பக்தர்கள் வருகை குறைந்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனம், பக்தர்கள் வருகை குறைந்ததால் களையிழந்தது.
திருமலை,
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவியத் தொடங்கினர். திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் இலவச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்துக்கு 10 மணிநேரம் ஆனது. காலை 10 மணிக்குள் அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்து விட்டு, திருமலையில் இருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று பகலில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் ஏழுமலையான் கோவிலிலும், திருமலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இல்லை. திருமலையில் பல்வேறு இடங்கள், பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தரிசனம் களையிழந்தது. திருமலையில் உள்ள பல்வேறு கடைகள், ஓட்டல்களில் வியாபாரமும் மந்தமாக இருந்தது.

Related Tags :
Next Story