ஜம்மு காஷ்மீர் ராஜோரி பகுதியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ஜம்மு காஷ்மீர் ராஜோரி பகுதியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 1:01 PM IST (Updated: 2 Jan 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உறைபனி சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தையும் வெள்ளை போர்வையால் மூடியதுபோல், பனி படர்ந்துள்ளது.

சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.  சாலைகளை மூடியுள்ள பனிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றாலும், சாலை போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சூழலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். 

Next Story