சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக போராட்டம்; போலீஸ் - பா.ஜனதாவினர் இடையே மோதல்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக பா.ஜனதா போராட்டம் நடத்தியது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு ஸ்திரமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கேரளாவை சேர்ந்த பிந்து, கனகதுர்கா இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று அய்யப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பா.ஜனதாவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் போலீஸ் இடையே மோதல் நேரிட்டது.
Related Tags :
Next Story