தேசிய செய்திகள்

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு + "||" + Kashmir: heavy snowfall - Normal life impact

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதியுடன் இந்த கடும் பனிப்பொழிவு காலம் நிறைவுபெறுகிறது. இதனால் புத்தாண்டு தினத்தில் இருந்து கடும்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.


ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்கம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் இன்று காலை பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரி செல்சியசும், லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4 டிகிரி வெப்பநிலையும் நிலவியது.

மேலும் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சதி முறியடிப்பு -5 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிகுண்டு தயாரித்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.
5. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - ராணுவ அதிகாரி வீர மரணம்
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.