கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு: சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கு: சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jan 2019 2:00 AM IST (Updated: 3 Jan 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில், சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை உலைக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், எனவே போதிய வசதிகளை செய்து முடிக்கும் வரை அங்குள்ள 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில், பதில் மனு தாக்கல் செய்ய மேலும் சிறிது கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 4 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

Next Story