மேகதாது அணை பிரச்சினை: மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு


மேகதாது அணை பிரச்சினை: மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:15 AM IST (Updated: 3 Jan 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக, மத்திய மந்திரி நிதின் கட்காரியை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி,

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று தமிழக எம்.பி.க்கள் குழுவினர் மத்திய நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் டாக்டர் மைத்ரேயன், வக்கீல் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும், தி.மு.க. தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் ஒப்புக்கொண்டால்தான் அதுபற்றி முடிவு எடுக்க முடியும் என்று நிதின் கட்காரி கூறியதாக தெரிகிறது.

Next Story