தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.
அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து, இன்னும் 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் புதிய உத்தரவை வெளியிட வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மின்சார இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கடந்த டிசம்பர் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்டு அறியவேண்டும் என்று கோரி ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டு என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான முறையீட்டை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. அப்படி முறையீடு செய்ய வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஐகோர்ட்டை அணுகி இருக்க வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தவறான நடைமுறையாகும்.
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுப்புறங்களில் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் கிடையாது. அதேபோல் அந்த குழுவுக்கும் விசாரணை நடத்த சட்டரீதியான அதிகாரம் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பாடும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நிலத்தடி நீர் மாசுபடுதல் ஆகியவை குறித்து பல்வேறு ஆவணங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சீர்கேடுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அவை ஏதோ சின்ன விஷயம் என்பதுபோல அணுகி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பித்த உத்தரவு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு ஆகும். மாநில அரசின் இதுபோன்ற கொள்கை முடிவில் தலையிடுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 15-ந் தேதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story