அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை புதிய அமர்வுக்கு மாற்றம்


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை புதிய அமர்வுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 4 Jan 2019 5:55 AM GMT (Updated: 4 Jan 2019 5:55 AM GMT)

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையை புதிய அமர்வுக்கு மாற்றி வரும் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்.

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிக்கலில் இருக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை, நிர்மோஹி அகாரா, சன்னி சென்ட்ரல் வக்பு வாரியம் மற்றும் ராம்லல்லா விரஜ்மான் ஆகிய அமைப்புகள் மூன்றாக பிரித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்களை புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளை கொண்ட அமர்வு ஜனவரி மாதம் விசாரிக்கும் என அக்டோபர் 29-ம் தேதி தெரிவித்தது.

அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று வந்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையை புதிய அமர்வுக்கு மாற்றி வரும் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்.  புதிய அமர்வு பின்னர் அறிவிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்து உள்ளது.

Next Story