தேசிய செய்திகள்

போபர்ஸால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் -நிர்மலா சீதாராமன் + "||" + Bofors was a scam, doomed Cong Rafale will bring Modi back Sitharaman

போபர்ஸால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் -நிர்மலா சீதாராமன்

போபர்ஸால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரபேலால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் -நிர்மலா சீதாராமன்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது, ரபேல் விமான கொள்முதலால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றார்.
புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. “ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். விமானங்கள் ஒன்றும் அலமாரியில் இல்லை. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விரும்பம் கிடையாது, எதுவும் செய்யவில்லை. விமானம் இவ்வாண்டு இந்தியாவிற்கு வாங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வாங்கப்படும்.

பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே எங்களுடைய முன்னுரிமை என்றார்.
 
காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும்.  உண்மைகளை மறைப்பதற்கே காங்கிரஸ் அமளியில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விமானத்தை வாங்க விரும்பவில்லை.

பணம் கிடைக்காது என தெரிந்ததால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பை புறந்தள்ளியது. போபர்ஸ் ஊழல் காரணமாகதான் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை இழந்தார். ஆனால் ரபேல் விமான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், அது பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர செய்யும் என்றார் நிர்மலா சீதாராமன்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி 1-ந் தேதி குமரி வருகை மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்
குமரிக்கு பிரதமர் மோடி மார்ச் 1-ந் தேதி வருகிறார். இதனையொட்டி நடந்து வரும் மேடை அமைக்கும் பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
2. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்.26-ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்களை பிப்ரவரி 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
3. அ.தி.மு.க.– பா.ஜனதா சந்தர்ப்பவாத கூட்டணி தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் பேட்டி
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் கூறினார்.
4. 3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை - காங்கிரஸ்
3 கிலோ மாட்டிறைச்சியை தேடி கண்டுபிடித்த மோடியால் 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மோடியை குற்றஞ்சாட்டி உள்ளது.
5. ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோட்டில் பட்டப்பகலில் கள்ளச்சாவி போட்டு காங்கிரஸ் நிர்வாகியின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் திருடியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.