ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது


ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 4 Jan 2019 6:30 PM GMT (Updated: 4 Jan 2019 5:54 PM GMT)

நாடாளுமன்ற மக்களவையில் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேறியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஆதார் மற்றும் இதர சட்டதிருத்தங்கள் மீதான வாதத்துக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர், 130 கோடி மக்கள் தொகையில் 123 கோடி மக்கள் ஆதாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆதார் நாட்டுக்காக உருவாக்கப்பட்டது. அதில் உள்ள குறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் மானியங்கள், பலன்கள் சென்றடைவதற்கு ஆதார் சட்டம் வழிவகுக்கிறது என்றார்.

இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது.


Next Story