தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Sterlite plant affair: The Supreme Court refused to hear the Tamil Nadu petition in an emergency case

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜராகி, தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் முறைப்படி பட்டியலிடும் போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.