தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு + "||" + New dam at Mullai Periyar: Government of Tamil Nadu Against Kerala Court contempt case

முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தது.
புதுடெல்லி,

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நேற்று தாக்கல் செய்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கேரள அரசு மற்றும் மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.