தேசிய செய்திகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு + "||" + Puducherry has been struggling with the demand for state status - Narayanasamy, Kanimozhi MP Participation

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த போராட்டத்தில் நாராயணசாமி, கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
புதுடெல்லி,

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பெடியை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டக்குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் கலந்துகொண்ட போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.


போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக-புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதா? மக்கள் நீதி மய்யம் கண்டனம்
புதுச்சேரியை சேர்ந்த உதவி பேராசிரியர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
2. புதுச்சேரி சட்டமன்ற பணிகள் கம்ப்யூட்டர் மயமாகிறது அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி
புதுவை சட்டமன்ற பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குவது தொடர்பாக அலுவலர்களுக்கான 2 நாள் பயிற்சியை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.
3. புதுச்சேரியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தடை
புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி கூறினார்.
4. கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள ஒரே பகுதி புதுச்சேரிதான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்த இந்தப் பகுதியில் பிரான்ஸின் தாக்கத்தை பார்க்கலாம்.
5. காதலியுடன் ஊர் சுற்ற பைக் வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர்
புதுச்சேரியில் காதலியை மகிழ்விக்க பேக்கரியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.