திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்திய கம்யூனிஸ்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணை


திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்திய கம்யூனிஸ்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 4 Jan 2019 10:45 PM GMT (Updated: 4 Jan 2019 9:14 PM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் இந்திய கம்யூனிஸ்டு மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் 7-ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

புதுடெல்லி,

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், காஜா புயல் தொடர்பான பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு காரணங்களுக்காக திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் டி.ராஜா தரப்பில் மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் ஆஜராகி, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்து, அதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் முறையிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி, இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் இந்த மனு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது.


Next Story