தேசிய செய்திகள்

மோசடி எதுவும் இல்லை, ”நடைபெற்றது சிவில் பரிவர்த்தனையே”: நீதிமன்றத்தில் நிரவ் மோடி பதில் + "||" + No Scam, It Was "Civil Transaction": Nirav Modi's Reply To Court

மோசடி எதுவும் இல்லை, ”நடைபெற்றது சிவில் பரிவர்த்தனையே”: நீதிமன்றத்தில் நிரவ் மோடி பதில்

மோசடி எதுவும் இல்லை, ”நடைபெற்றது சிவில் பரிவர்த்தனையே”: நீதிமன்றத்தில் நிரவ் மோடி பதில்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான் மோசடி எதுவும் செய்யவில்லை என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து,  இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். 

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.   நிரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அரசிற்கு தகவல் தந்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. 

இதற்கு மத்தியில், நிரவ் மோடியை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றது சிவில் பரிவர்த்தனை மட்டுமே எனவும் மோசடி எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டு நிராகரித்தது.
2. லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயார்
லண்டன் சிறையில் இருக்கும் நிரவ் மோடிக்கு மும்பை சிறையில் அறை தயாராகி உள்ளது. விஜய் மல்லையாவையும் அதே அறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது.
3. இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு
நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. #NiravModi
4. நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்
வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தின் முன் ஆஜராகி உள்ளார். #NiravModi
5. லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியின் 3–வது ஜாமீன் மனு மீது 8–ந் தேதி விசாரணை
நிரவ் மோடியின் 3–வது ஜாமீன் மனு மீது லண்டன் கோர்ட்டில் 8–ந் தேதி விசாரணை நடக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...