சட்டவிரோத மணல் குவாரி வழக்கு சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ் யாதவ்!


சட்டவிரோத மணல் குவாரி வழக்கு சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ் யாதவ்!
x
தினத்தந்தி 5 Jan 2019 1:03 PM GMT (Updated: 5 Jan 2019 1:03 PM GMT)

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அகிலேஷ் யாதவை கண்காணிப்பு வளையத்திற்குள் சிபிஐ கொண்டுவந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது.  முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத் விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளனர். கோடி கணக்கில் மோசடி நடந்த இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணையை விஸ்தரிக்கிறது. இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி, சமாஜ்வாடி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இப்போது ஊழல் விவகாரத்தில் அனைத்து மந்திரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ தகவல்கள் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிபிஐ இவ்வழக்கை விசாரிக்கிறது. விசாரணை அகிலேஷ் யாதவ் வரையில் நகரலாம் எனவும் கூறப்படுகிறது.

2019 பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரசை மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story