தேசிய செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது - சென்னை ஏஜெண்டுக்கு வலைவீச்சு + "||" + Sri Lankan refugee arrested in Belgium by fake documents - Police search for the Chennai agent

போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது - சென்னை ஏஜெண்டுக்கு வலைவீச்சு

போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது - சென்னை ஏஜெண்டுக்கு வலைவீச்சு
போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சுக்கு சமீபத்தில் விமானம் ஒன்று சென்றது. இதில், முத்துகிருஷ்ணன் பெருமாள் (வயது 41) என்ற பெயரில் சென்ற பயணியின் ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவா் போலி ஆவணங்கள் மூலம் அங்கு சென்றது தெரியவந்தது. அவரது உண்மையான பெயர் கிருபாகரன் கணேசன் என்று கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் இருந்த இலங்கை ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் இந்திய ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.


மும்பை வந்த அவரை சகார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், இலங்கை அகதியான கிருபாகரனை சென்னையை சேர்ந்த அண்டன் என்ற ஏஜெண்டு, ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியத்துக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அண்டனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.