தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை + "||" + INX Media Case: Implementation Department to P. Chidambaram Re-investigation

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது.
புதுடெல்லி,

ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.


இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகினார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை ப.சிதம்பரம் பேச்சு
தேர்தல் முடிவுக்கு பின்னர் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதில் சந்தேகம் இல்லை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
2. பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு
பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
3. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - ப.சிதம்பரம் பேச்சு
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
4. பா.ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி பேசினார்.
5. விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தினை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம்; ப. சிதம்பரம்
விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தினை பா.ஜ.க. அரசு வெளியிட்டது துரோகம் என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.