தேசிய செய்திகள்

மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை + "||" + Megadathu affair: 3 more ADMK MPs from the Lok Sabha are suspended - Speaker action

மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை

மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை
மேகதாது விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று இடைநீக்கம் செய்தார்.
புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வரும் தமிழக எம்.பி.க்கள், அதற்கு மத்திய அரசு இணங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் நடப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன. எனவே தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக மக்களவையில் இருந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் மீதமுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களில் 3 பேர் நேற்றும் மக்களவையில் மேகதாது பிரச்சினையை எழுப்பினர். நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போது, அ.தி.மு.க.வை சேர்ந்த வேணுகோபால், ராமச்சந்திரன், கே.கோபால் ஆகிய 3 எம்.பி.க் கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று மேகதாது பிரச்சினை தொடர்பாக கோஷங் களை எழுப்பினர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது.

அவர்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர், சபையை நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவாறே இருந்தனர். இதைத்தொடர்ந்து 3 எம்.பி.க்களையும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 2 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதைப்போல அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் அமளியில் ஈடுபட்டு இருந்த தெலுங்குதேசம் எம்.பி. சிவபிரசாத்தையும் சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். முன்னதாக கடந்த வாரமும் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் இன்றைய கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை
கடைசி அலுவல் தினமான நேற்று, மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை பெற்றனர்.
2. ‘மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய்’ - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டவை அப்பட்டமான பொய் என தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
4. ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது
நாடாளுமன்ற மக்களவையில் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேறியது.
5. மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்
5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.