தேசிய செய்திகள்

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை + "||" + Former Gujarat BJP MLA Jayantilal Bhanushali shot dead onboard train

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை
ரெயிலில் பயணம் செய்து கொண்டு இருந்த முன்னாள் எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அகமதாபாத்

குஜராத் மாநிலம் அபடசா தொகுதியைச் சேர்ந்த   பாரதீய ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ  ஜெயந்திலால் பனுசாலி. இவர் நேற்று  சாய்ஜி  நகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பில்  புஜியில் இருந்து அகமதாபாத் பயணம் செய்தார்.

அவர் சென்ற ரெயில்  கட்டாரியா மற்றும் சுர்பாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருந்தது. அப்போது பனுசாலி பயணம் செய்த  முதல் வகுப்பு பெட்டிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  பனுசாலியை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பனுசாலியின் தலை மற்றும் கண் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து பனுசாலி உயிரிழந்தார்.

ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக  ரெயிலை நிறுத்தினர். இது குறித்து மாலியா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தற்போது மாலியா  மருத்துவமனையில் பனுசாலி உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது குடும்பத்தாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்’’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
2. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
3. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் தங்க தமிழ்செல்வன் பேட்டி
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.
4. திருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய கும்பல் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
திருப்பூரில் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த பா.ஜனதா பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
5. பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் எந்த கட்சி போட்டி? சாமிநாதன் எம்.எல்.ஏ. பதில்
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது இன்னும் 15 நாட்களுக்குள் தெரிந்துவிடும் என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.