தேசிய செய்திகள்

பா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம் + "||" + BJD not to be part of Mahagathbandhan Patnaik

பா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம்

பா.ஜனதாவிற்கு எதிரான மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது - பிஜு ஜனதா தளம்
பா.ஜனதாவிற்கு எதிராக மெகா கூட்டணியில் நாங்கள் கிடையாது என பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.

புவனேஷ்வர்,


2019 தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் தன்னுடைய நிலையை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பாட்நாயக் பேசுகையில், பா.ஜனதா மற்றும் காங்கிரசிடம் இருந்து எப்போதும் சம அளவு விலகியே இருப்போம். மெகா கூட்டணியை பொறுத்தவரையில் பிஜு ஜனதா தளம் அதில் இடம்பெறாது என கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...