இட ஒதுக்கீடு செய்கிறீர்கள், வேலைவாய்ப்பு எங்கே? மாநிலங்களவையில் அரசுக்கு காங்கிரஸ் கேள்வி


இட ஒதுக்கீடு செய்கிறீர்கள், வேலைவாய்ப்பு எங்கே? மாநிலங்களவையில் அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 9 Jan 2019 10:51 AM GMT (Updated: 9 Jan 2019 11:57 AM GMT)

இட ஒதுக்கீடு செய்கிறீர்கள், ஆனால் வேலைவாய்ப்பு எங்கே என மாநிலங்களவையில் அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வருவதையொட்டி மத்திய அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.  இட ஒதுக்கீடு செய்கிறீர்கள், ஆனால் வேலைவாய்ப்பு எங்கே என மாநிலங்களவையில் அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
 
காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், 2014-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குவதை மறந்து விடுங்கள், 2018-ம் ஆண்டில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். 2019 தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் நீங்கள் மசோதாவை கொண்டு வந்துள்ளீர்கள். மத்திய அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்ற பட்டியலை வெளியிட்டார். 

10 சதவிகித இட ஒதுக்கீடு தேசத்தில் உள்ள 98 சதவிகித மக்களுக்கு பொருந்தும். இப்போதைய நிலையில் வேலைவாய்ப்பு  உருவாக்கம் செய்தால் வாக்குறுதியை நிறைவேற்ற 800 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது என கூறினார். முதலில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துங்கள் எனவும் அரசை சாடியுள்ளார் ஆனந்த் சர்மா. 

Next Story