பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் - கனிமொழி எம்.பி.


பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் -  கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 9 Jan 2019 1:14 PM GMT (Updated: 9 Jan 2019 1:14 PM GMT)

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் என்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி.பேசியுள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் திமுக எம்.பி. கனிமொழி  பேசியதாவது:

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது.

நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது. 

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story