டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிப்பு


டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 4:21 PM GMT (Updated: 9 Jan 2019 4:21 PM GMT)

டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2016ம் வருடம் 2,065 கற்பழிப்பு வழக்குகளும், 2017ம் வருடத்தில் 2,059 கற்பழிப்பு வழக்குகளும், கடந்த வருடத்தில் 2,043 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி உள்ளன.  இதேபோன்று கடந்த 2016ம் வருடம் 4,032 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும், கடந்த 2017ம் வருடம் 3,275 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் மற்றும் கடந்த வருடத்தில் 3,175 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளன.

கடந்த 3 வருடங்களில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.  பெருமளவிலான கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகள், பாதிக்கப்படுவோருக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களாகவே உள்ளனர்.

இவர்களில் 43 சதவீதத்தினர் நண்பர்களாகவோ அல்லது குடும்ப நண்பர்களாகவோ உள்ளனர்.  16.25 சதவீதத்தினர் அண்டை வீட்டாராகவும், 12.04 சதவீதத்தினர் உறவினர்களாகவும், 2.89 சதவீதத்தினர் உடன் பணிபுரிவோராகவும், 22.86 சதவீதத்தினர் மற்ற தெரிந்த நபர்களாகவும் உள்ளனர்.  2.5 சதவீதத்தினரே அறிமுகமற்ற நபர்களாக உள்ளனர்.

டெல்லியில் கடந்த வருடத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 5 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.  8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story