தேசிய செய்திகள்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடி, நாகேஸ்வரராவ் பிறப்பித்த இடமாறுதல்களை ரத்து செய்தார் + "||" + CBI Director Alok Verma Cancels Most Transfers Ordered By Interim Chief M Nageshwar Rao

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடி, நாகேஸ்வரராவ் பிறப்பித்த இடமாறுதல்களை ரத்து செய்தார்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடி, நாகேஸ்வரராவ் பிறப்பித்த இடமாறுதல்களை ரத்து செய்தார்
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றதும், இடைக்கால இயக்குநராக இருந்த நாகஸ்வரராவ் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்தார்.
புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனையடுத்து அலோக் வர்மாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி இரவு மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவையும் அரசு நியமித்தது.

கட்டாய விடுமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலோக் வர்மாவின் அதிகார பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்கு காரணமான மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தனர். மேலும் இடைக்கால இயக்குனர் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.

கோர்ட்டு உத்தரவால் சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா செயல்படுவதில் தடை நீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா, நேற்று மீண்டும் அலுவலகம் வந்து பதவி ஏற்றுக்கொண்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம், வருகிற 31-ந் தேதியோடு நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றதும், இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வரராவ் பிறப்பித்த இடமாறுதல்களை ரத்து செய்தார். 
10 சிபிஐ அதிகாரிகளை நாகேஷ்வரராவ் இடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருந்தார்.