தேசிய செய்திகள்

ரபேல் விவகாரம்:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு + "||" + Hindustan Aeronautical Staff Meet with Rahul Gandhi

ரபேல் விவகாரம்:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு

ரபேல் விவகாரம்:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு
டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர்.
புதுடெல்லி,

ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் - 22ந் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 22-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.
2. ரபேல் விவகாரம் : பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுல்காந்திக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
3. ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்- நிர்மலா சீதாராமன்
ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
4. ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் - சுப்ரீம் கோர்ட்
ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
5. ரபேல் விவகாரம்; யார் பிரசாரத்திற்கு வலு?
பா.ஜ.க. அரசு மீது ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வீசிக்கொண்டிருந்தது.