தேசிய செய்திகள்

‘நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன’ராணுவ தளபதி பேட்டி + "||" + Army Commander interview

‘நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன’ராணுவ தளபதி பேட்டி

‘நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன’ராணுவ தளபதி பேட்டி
நாட்டின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் நாங்கள் அமைதியை பராமரித்து வருகிறோம். நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன. இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை.

ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல.

ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.