என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா


என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அலோக் வர்மா
x
தினத்தந்தி 11 Jan 2019 7:55 AM GMT (Updated: 11 Jan 2019 8:55 AM GMT)

என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அற்பமானவை என்று சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பு ஏற்ற அலோக் வர்மாவின் பதவியை மத்திய அரசு நேற்று பறித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அற்பமானவை என்றும் ஆதாரமற்றவை எனவும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அலோக் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ''அற்பமான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது. இவை அனைத்தும் எனக்குப் பகையான ஒரு நபரால் உருவாக்கப்பட்டவை.

மீண்டும்  இயக்குநர் பொறுப்பு என்னிடம் வழங்கப்படும் எனில், சட்ட விதிகளின்படி, அதையே திரும்பச் செய்வேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் கடந்த அக்டோபர் 23-ல் வெளியான சிவிசி உத்தரவுகளும் என்னுடைய உண்மைக்கான ஆதாரங்கள்'' என்று தெரிவித்துள்ளார். அலோக் வர்மாவின் பதவிக்காலம் ஜனவரி 31-ம் தேதியோடு முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story